தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளத்தில் படர்ந்திருந்த ஆகாயத் தாமரையை அப்புறப்படுத்திய தன்னார்வ இளைஞர்கள் : பொதுமக்கள் பாராட்டு

திருவாரூர் : திருத்துறைப்பூண்டி அருகே குளத்தில் படர்ந்திருந்த ஆகாயத் தாமரை செடிகளை அப்புறப்படுத்திய தன்னார்வ இளைஞர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஆகாய தாமரையை அப்புறப்படுத்திய தன்னார்வ இளைஞர்கள்
ஆகாய தாமரையை அப்புறப்படுத்திய தன்னார்வ இளைஞர்கள்

By

Published : Oct 12, 2020, 4:53 PM IST

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி. இங்குள்ள கீழக்காடு பகுதியில் உள்ள குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்திருந்தன. இதனால் தண்ணீரில் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசியது.

இந்நிலையில், இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சிமன்றத் தலைவரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதே ஊரைச் சேர்ந்த கல்லூரி இளைஞர்களான வசந்த், உதயபாலா, ராஜசோழன் ஆகியோர் தாமாக முன்வந்து குளம் முழுவதும் படர்ந்திருந்த ஆகாயத்தாமரையை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

ஆகாய தாமரையை அப்புறப்படுத்திய தன்னார்வ இளைஞர்கள்

குளத்தில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் மண் எடுப்பதால் தண்ணீரின் ஆழம் அதிக அளவில் இருந்துள்ளது. இருந்தபோதிலும், இளைஞர்கள் இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு பாதுகாப்போடு குளத்தில் படர்ந்திருந்த ஆகாயத் தாமரையை அகற்றினர். இதையடுத்து அவர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நீரோட்டத்தை தடுத்த ஆகாய தாமரை தேக்கம்- அகற்றிய பொதுப்பணித் துறை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details