கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கியன. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் கரோனா தொற்று குறைந்து வருகிறது. அரசும் கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அதில் குறிப்பாக கிராமப்புறங்களில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வேலை செய்யலாம் என அரசு அறிவித்தது.
அதன்படி இத்திட்டத்தில் திருவாரூர் மாவட்ட கிராமப்புறங்களில் வயதானவர்களுக்கு தொற்று பரவும் என்பதால் அனுமதிக்கப்படவில்லை. மற்றவர்கள் முகக்கவசம், தகுந்த இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளுடன் பணிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது மகாத்மா தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. கரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்து வந்த பொதுமக்களுக்கு, இந்த தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் பேருதவியாக உள்ளது.
இதையும் படிங்க: காப்பீட்டு நிறுவனங்கள் முழு கட்டணத்தை வழங்குவதில்லை’