தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய திமுகவினர் மீது வழக்குப்பதிவு - மின் கட்டண உயர்வு

திருவாரூர்: மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா உள்ளிட்ட திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுகவினர் போராட்டம்
திமுகவினர் போராட்டம்

By

Published : Jul 22, 2020, 12:58 PM IST

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வை கண்டித்து திமுக சார்பில் நேற்று (ஜூலை 21) கருப்புக்கொடி ஏந்தி திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்திருந்தனர். காவல் துறையினரின் தடையை மீறி திமுகவினர் தங்களது வீடுகள் முன்பும் பொது இடங்களிலும் தகுந்த இடைவெளியை கடைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் 76 இடங்களில் போராட்டம் செய்த திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா, திமுக இளைஞரணியை சேர்ந்த ரஜினிசின்னா உள்பட திருவாரூர் மாவட்டம் முழுவதும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1,050 பேர் மீது காவல் துறையினரின் தடையை மீறி போராட்டம் செய்தல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details