திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் இயங்கி வரும் ஊடக சான்றளிப்பு மற்றும் ஊடகக் கண்காணிப்பு மைய செயல்பாடுகளை மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான வே.சாந்தா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் அவர் கூறியதாவது:
வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களைக் கண்காணிக்க ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் செய்தித்தாள்களில் வெளிவரும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் தொடர்பான விளம்பரங்கள், பரப்புரை செய்திகள், வேட்பாளர்கள் குறித்து வெளியிடப்படும் கருத்துகள் ஆகியவைகள் கண்காணித்து பதிவு செய்யப்படும்.