தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்வேறு வகையான கோரிக்கையை வலியுறுத்தி தனியார் பள்ளி ஆசிரியர்கள், உரிமையாளர் உண்ணாவிரதம்! - பல்வேறு வகையான கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம்

திருவாரூர்: மாணவர்களுக்கான சென்ற ஆண்டு கட்டண பாக்கியை வசூல் செய்ய அனுமதி வழங்க வலியுறுத்தி மாவட்டத்திலுள்ள தனியார் ஆரம்ப மற்றும் தொடக்க நிலை பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Private school teachers and owner fasting emphasizing various types of demand!

By

Published : Jul 10, 2020, 7:07 PM IST

கரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் ஆரம்ப மற்றும் தொடக்க நிலை பள்ளி ஆசிரியர்கள், பள்ளி உரிமையாளர்கள் இன்று திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின் போது, மாவட்டத்திலுள்ள ஆரம்ப மற்றும் தொடக்க நிலைப் பள்ளிகளை, நடுநிலைப் பள்ளிகளாக மாற்ற வேண்டும், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான நல வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும், தனியார் பள்ளிகளுக்கு எவ்வித நிபந்தனையும், நிர்பந்தமும் இல்லாமல் மூன்றாண்டுகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

மேலும், 2019 -20 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டண பாக்கியை 100 விழுக்காடு வசூலிக்க உடனடியாக அனுமதி வழங்க வேண்டும், கரோனா காலத்தில் வேலை இழந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஓய்வு ஊதியமாக ரூபாய் பத்தாயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் பள்ளியில் ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details