திருவாரூர் மாவட்டம் காட்டூரில் பாரதி பெண்கள் மேம்பாட்டு மையம் என்ற பெயரில் தனியார் வங்கி ஒன்று இயங்கிவருகிறது. இதன் ஒரு கிளை திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள கச்சனத்தில் இயங்கிவரும் நிலையில் அந்தப் பகுதி பெண்கள் பணம் பெற்று மாதாந்திர தவணை முறையில் செலுத்திவருகின்றனர்.
கரோனாவால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவரும் நிலையில், ஆறு மாத காலத்திற்கு வாடிக்கையாளர்களிடம் வட்டி, தவணைத் தொகை கேட்க வேண்டாம் என மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவை அனைத்து வங்கிகளையும் அறிவுறுத்தியிருக்கின்றன.
இதனை மீறி கச்சனம் பகுதியில் பாரதி பெண்கள் மேம்பாட்டு மையம் என்ற தனியார் வங்கி வட்டி, தவணையை வசூலித்துவருகிறது. இதனால் தாங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டுவருகிறோம். எனவே தமிழ்நாடு அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தனியார் வங்கிகளில் கூடுதல் வட்டி வசூலிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை - thiruvarur district news in tamil
திருவாரூர்: தனியார் வங்கிகளில் கூடுதல் வட்டி வசூலிப்பதால் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
private bank