தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தர் நியமனம் - muthulingan krishnan

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக முத்துகலிங்கன் கிருஷ்ணன் நியமனம்செய்யப்பட்டுள்ளார்.

President Ram Nath Kovind
முத்துகலிங்கன் கிருஷ்ணன்

By

Published : Jul 23, 2021, 4:04 PM IST

Updated : Jul 23, 2021, 5:50 PM IST

12 மத்தியப் பல்கலைக்கழகத்திற்குப் புதிதாகத் துணைவேந்தர்களை நியமித்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

புதிய துணைவேந்தர்கள் பட்டியல்:

  • ஹரியானாவில் பேராசிரியர் தங்கேஸ்வர் குமார்
  • இமாச்சலப் பிரதேசத்தில் பேரா. சத் பிரகாஷ் பன்சால்
  • ஜம்முவில் முனைவர் சஞ்சீவ் ஜெயின்
  • ஜார்க்கண்டில் பேரா. ஷித்தி பூஷன் தாஸ்
  • கர்நாடகத்தில் பேரா‌. பட்டு சத்யநாராயணா,
  • தமிழ்நாட்டில் பேரா. முத்துகலிங்கன் கிருஷ்ணன்
    12 மத்தியப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம்
  • தெலங்கானாவில் முனைவர் பாசுத்கர் ஜே ராவ்
  • தெற்கு பிகாரில் பேரா. காமேஸ்வர் நாத் சிங்,
  • வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகத்தில் பேரா. பிரபா ஷங்கர் சுக்லா,
  • குரு காஷிதாஸ் பல்கலைக்கழகத்திற்கு முனைவர் அலோக் குமார் சக்ரவால்,
  • மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகத்திற்கு பேரா. சையத் ஐநுல் ஹாசன்,
  • மணிப்பூர் பல்கலைக்கழகத்திற்கு பேரா. என் லோகேந்திர சிங்

முத்துகலிங்கன் கிருஷ்ணன்

இதில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றிவரும் முத்துகலிங்கன் கிருஷ்ணன், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம்செய்யப்பட்டுள்ளார்.

அவர் பணியில் இணையும் நாளிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கோ அல்லது அவருக்கு 70 வயது ஆகும் வரையிலோ துணைவேந்தராக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தர் நியமனம்

கடந்த 28 ஆண்டுகளாகப் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், வெளிநாட்டுக் கருத்தரங்குகளில் 125-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியது யார்? சைபர் கிரைம் காவல் துறை ட்விட்டருக்கு கடிதம்

Last Updated : Jul 23, 2021, 5:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details