திருவாரூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று அறிகுறியுடன் மொத்தம் 19 கர்ப்பிணிகள் அம்மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர்.
இதில் ஏழு கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெற்று குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் ஐந்து பேருக்கு அறுவை சிகிச்சையும், இரண்டு பேருக்கு சுகப் பிரசவமும் நடந்துள்ளது.
இந்த ஏழு குழந்தைகளுக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏதும் இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
மகப்பேறு தலைமை மருத்துவர் பிரபா, இவர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்ற பிறகும் தனிமையில் இருக்கும்படியும், குழந்தைகளுக்கு பால் பவுடர் ,பசும்பால் உள்ளிட்டவைகளை கொடுக்காமல் தாய்ப்பால்தான் தொடர்ந்து கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
மீதமுள்ள கர்ப்பிணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.