தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு தமிழனும் காயப்பட கூடாது- பி ஆர் பாண்டியன் - பட்ஜெட்

இனி ஒரு தமிழனும் காயப்படுவதற்கோ, சொத்துக்களில் துளி கூட இழப்பதற்கோ, தமிழ்நாடு அனுமதிக்கக்கூடாது என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தினார்.

pr pandian  farmer pr pandiyan  thiruvarur farmer pr pandian  thiruvarur news  thiruvarur latest news  mannargudi pr pandian  பி.ஆர். பாண்டியன்  பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை  விவசாயிகள்  விவசாயிகள் எச்சரிக்கை  திருவாரூர் செய்திகள்  agri budget  budget  pr pandian talks about agri budget  வேளாண் பட்ஜெட்  பட்ஜெட்  வேளாண் பட்ஜெட் தாக்கல்
வேளாண் பட்ஜெட் தாக்கல்

By

Published : Aug 14, 2021, 6:46 PM IST

திருவாரூர்: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன், வரலாற்று சிறப்புமிக்க தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வதை வரவேற்கும் விதமாக வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் விவசாயிகளோடு கொண்டாடினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசு சட்டம் போட்டு தன்னை வேளாண் கொள்கையில் இருந்து முற்றிலும் விலக்கி கொண்டுள்ளது. இந்திய விவசாயிகளை கார்ப்பரேட் முதலாளிகளிடம் அடிமைப்படுத்திவிட்டது.

கார்ப்பரேட்டுகளிடம் அடிமைப்பட வேண்டுமா?

இதனை எதிர்த்து தொடர்ந்து வட மாநில விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்தியா முழுவதும் ஆதரித்து அவர்களோடு துணை நின்று போராடி வருகிறோம்.

தமிழ்நாடு அரசாங்கம் வேளாண் சட்டத்தை கைவிட வலியுறுத்தி சட்டப்பேரவையில் ஒத்த கருத்தோடு தீர்மானம் நிறைவேற்ற உத்தரவாதம் அளித்திருக்கிறது.

இந்நிலையில் இந்திய விவசாயிகள் மத்திய அரசின் விவசாய விரோத சட்டத்தால் ஒட்டுமொத்தமாக விவசாயத் தொழிலில் இருந்து வெளியேற வேண்டுமோ, கார்ப்பரேட்டுகளிடம் அடிமைப்பட நேரிடுமோ, என்கிற அச்ச நிலையில் பரிதவித்து வருகிறார்கள்.

காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி ஆர் பாண்டியன் பேச்சு

ழுமையாக துணை நிற்போம்

இந்திய விவசாயிகளுக்கு துணிவை ஏற்படுத்துகிற வகையிலும், தமிழ்நாட்டில் விவசாயத்தை தொழிலாக அங்கீகரித்து லாபகரமான தொழிலாக மாற்றும் உயரிய நோக்கோடு தனி பட்ஜெட் தாக்கல் செய்வது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இன்றைய நாள் விவசாயிகளின் வாழ்க்கையில் கிடைத்த ஒரு பொன்னாள். இன் நன்னாளில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களையும் அறிக்கையை தாக்கல் செய்துள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களையும் தமிழ்நாடு விவசாயிகள் சார்பாக வாழ்த்துகிறோம்.

இந்த நிதிநிலை அறிக்கை மத்திய அரசுக்கு சவால் விடுகிற வகையில் விவசாயிகளை பாதுகாக்கும் உயரிய நோக்கோடு கொண்டுவரப்படுகிறது. எனவே இதற்கு விவசாயிகள் முழுமையாக துணை நிற்போம்.

தீவிரமடைந்த பிரச்சினை

ஒரு புதிய சட்டத்தை கொண்டு வருகிற போது, சில கசப்பான உணர்வு கூட இருக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு விவசாயிகள் நலனை முன்னிறுத்தி கொண்டு வரப்படுகிற இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை, முழு வெற்றி பெற தமிழ்நாடு விவசாயிகள் துணை நிற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

காவிரி பிரச்சினையில் தொடர்ந்து கர்நாடக அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டிற்கு எதிரான நடவடிக்கையில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. குறிப்பாக முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா தான் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் காவிரி பிரச்சினை தீவிரமடைந்து.

இந்நிலையில் கர்நாடக சிறைகளில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொடும் தண்டனை கைதிகளான குண்டர்களை விடுவித்து கர்நாடகாவில் உள்ள தமிழர்களுடைய சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

அகதிகளாக அடித்து விரட்டப்பட்ட தமிழர்கள்

நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. தமிழர்கள் அகதிகளாக அடித்து விரட்டப்பட்டார்கள். இதுவரையிலும் இதற்கு தீர்வு கிடைக்காத நிலை தொடர்கிறது.

இந்நிலையில் மேகதாது அணை கட்டுவதை தொடர்ந்து தமிழ்நாடு எதிர்க்குமேயானால், கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு எதிரான அரசியல் மோதல்களை தொடங்குவதை தடுக்க இயலாது என மிரட்டி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இது இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கும், அண்டை மாநில உறவுகளையும் சீர்குலைக்கும் செயலாகும். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.

கண்டிக்க வேண்டும்

மோடி அரசு இதனை வேடிக்கை பார்க்க கூடாது. இச்செயல் குறித்து மத்திய உள்துறை, கர்நாடக அரசிடம் உரிய விளக்கம் கேட்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் இதனை கண்டிக்க வேண்டும்.

உடனடியாக மத்திய உள்துறையிடம் அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி புகார் மனு அளிக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். தமிழர்களையும், அவர்களின் சொத்துக்களையும் காப்பாற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இனி ஒரு தமிழனும் காயப்படுவதற்கோ, சொத்துக்களில் துளி கூட இழப்பதற்கோ, தமிழ்நாடு அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்துகிறோம்” என்றார்.

இதையும் படிங்க: வேளாண் வளர்ச்சித்திடல் அமைப்பு திட்டத்துக்கு வரவேற்பு

ABOUT THE AUTHOR

...view details