தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து - பி.ஆர். பாண்டியன் கண்டனம் ! - மத்திய நிதிநிலை அறிக்கை

மத்திய அரசின் 2021 - 22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தாஙிகள் விரும்பும் நிறுவனங்களிடமிருந்து மின்சார இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பு மூலம், விவசாயத்திற்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தவைவர் பி. ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பி.ஆர். பாண்டியன் கண்டனம்
பி.ஆர். பாண்டியன் கண்டனம்

By

Published : Feb 1, 2021, 5:53 PM IST

திருவாரூர்: விவசாயத்திற்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2021-22 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தா ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிக்கிறது. விவசாயிகளுக்கு அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு எந்த ஒரு திட்டமும் அறிவித்ததாக தெரியவில்லை. அதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் குறிப்பிடவில்லை.

கடந்த 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு இன்றைக்கு நாங்கள் நெல்லுக்கான விலையை இரட்டிப்பாக்கி உள்ளோம் என்று தங்களைத் தாங்களே பாராட்டிக்கொள்வது பிரச்சினையை திசை திருப்பும் நடவடிக்கையே. 2013 ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலும் சுமார் எட்டு ஆண்டு காலத்திற்கு விலை இரட்டிப்பு என்று சொல்லுவது ஏற்க இயலாது. அன்று (2013 ) ஒரு மூட்டை டிஏபி உரத்தின் விலை ரூ375 க்கு விற்பனை செய்யப்பட்டது; இன்றைக்கு ரூ1500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இடுபொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் நெல்லுக்கான விலையை ஒரு மடங்கு உயர்த்தி, நெல்லுக்கு நாங்கள் விலை கொடுக்கிறோம் என்ற அறிவிப்பு செய்வது மோசடியான அறிவிப்பாகும்.

நதிநீர் இணைப்பு திட்டம், நீர் ஆதார மேம்பாடு, கிடங்குகள் கட்டுவது, இயந்திரம் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான வகையில் எந்தவொரு அறிவிப்புகளோ, நிதி ஒதுக்கீடுகளோ இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. பருவகால மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கான சிறப்பு திட்டங்கள் தொழில்நுட்பங்களை உள்ளடக்கி இடம்பெறவில்லை. தொடர்ந்து இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கப்பட்டு வந்தது. அதனை தனியார்மாக்கியது மட்டுமன்றி, இன்றைக்கு 79 விழுக்காடு காப்பீட்டுத் துறையில் தனியாரை அனுமதிப்பது ஒட்டு மொத்த இந்திய அரசின் பொதுத்துறை முழுவதும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது மூலமாக முதலில் பாதிக்கப்படுவது விவசாயம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கான அறிவுப்புகள் இடம்பெறவில்லை. லாபகரமான விலை நிர்ணயம் செய்யாமல் விவசாயிகளை பாதுகாக்க இயலாது. குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து கொள்முதல் நடப்பாண்டு தொடரும் என்று அறிவித்திருப்பது சந்தேகமளிக்கிறது. குறிப்பாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெறவில்லை.

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட மேற்கொண்ட நடவடிக்கை போராட்டங்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த சட்டங்களில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிதான் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

குறிப்பாக தாங்கள் விரும்பும் நிறுவனங்களிடம் மின்சார இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என்கிற ஒரு அறிவிப்பை செய்ததின் மூலம் விவசாயத்திற்கான இலவச மின்சாரம் ரத்து செய்துவிட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.தமிழக அரசு இவ்வறிவிப்பு குறித்து உரிய விளக்கம் அளிக்க முன்வரவேண்டும். மத்திய அரசாங்கம் தனது அறிவிப்பை கைவிட்டு மின்சார துறையை மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிற்குள் மீண்டும் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க:வரி குறித்து ஆட்சியாளர்களுக்கு வள்ளுவர் கூறுவது என்ன? குறளை மேற்கோள்காட்டிய நிதியமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details