திருவாரூரில் திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட புதிய பேருந்து நிலைய பணிகள் பலகட்ட போராட்டங்களைக் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வருவதற்கு கூடுதலாக பயணச்சீட்டு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் புதிய பேருந்துநிலைய குறைபாடுகளை சரி செய்ய பூண்டி கலைவாணன் கோரிக்கை! - பூண்டி கலைவாணன் கோரிக்கை
திருவாரூர்: புதிய பேருந்து நிலையத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அலுவலர்களிடம், திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன், நகராட்சி அலுவலர் சங்கரன் ஆகியோர் புதிய பேருந்து நிலையத்தை பார்வையிட்டனர். அப்போது பூண்டி கலைவாணன் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் முறையான இடத்தில் நிற்க வேண்டும். தஞ்சாவூர், மன்னார்குடி ஆகிய பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் வந்து செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நகராட்சி அலுவலரிடம் முன் வைத்தார்.
மேலும் அவர், ’எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் வைத்த கோரிக்கை என இதனைக் கருதாமல் பொதுமக்கள் நலன் காக்க அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கேட்டுகொண்டார்.