நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்றினை கட்டுபடுத்துவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன், திருவாரூர் மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுபடுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் சாந்தாவுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
‘கரோனா நோயாளிகளுக்கான வசதிகள் 3 நாட்களில் மேற்கொள்ளப்படும்’-பூண்டி கலைவாணன் இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பூண்டி கலைவாணன், “கரோனாவின் தாக்கத்திலிருந்து மக்களை காப்பதற்காக, மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் இரவு பகலாக பணியாற்றி வருகிறார். தேர்தலுக்கு முன்பாக சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளின் வசதிக்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தல் விதிகள் முடிந்து தற்போது நீக்கப்பட்டு இருப்பதால், அந்த நிதி உடனடியாக பயன்படுத்தப்பட்டு கூடுதலாக 200 நோயாளிகள் பயன்பெறும் வகையில் 3 நாட்களில் பணிகள் முடிக்கப்பட்டு, உரிய வசதிகள் ஏற்ப்படுத்தி கொடுக்கப்படும்” என கூறினார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்