தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 6, 2020, 2:23 PM IST

Updated : Jan 6, 2020, 2:30 PM IST

ETV Bharat / state

’எப்பவுமே அதிமுகதான் நம்பர் ஒன்’

திருவாரூர்: உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று அதிமுக முதலிடத்தில் இருப்பதாகக் கூறிய உணவுத் துறை அமைச்சர் காமராஜ் எப்போதுமே அதிமுகதான் முதலிடத்தில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

minister_kamaraj_
minister_kamaraj_

திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கீழவிதியிலுள்ள நியாயவிலைக் கடையில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ், பொங்கல் சிறப்புப் பரிசு தொகுப்பை தொடங்கி வைத்தார். பொங்கலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 63 ஆயிரத்து 763 குடும்ப அட்டைதாரர்களுக்கு கூட்டுறவுத் துறை மூலம் செயல்படும் 721 நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. அதன் முதல்கட்டமாக ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன், கரும்பு, அரிசி, முந்திரி உள்ளடங்கிய சிறப்புப் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "அதிமுகவுக்கு என கொள்கை நிலைப்பாடு உள்ளது. அதனடிப்படையில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது. இருப்பினும், இலங்கை மக்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதிலும் இந்தியாவிலுள்ள அனைத்து சிறுபான்மையினர்க்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது.

பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு விழாவில் அமைச்சர் காரசார பேச்சு

உள்ளூரில் எங்களுக்குள் சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி அதிகளவில் வெற்றிபெற்றுள்ளது. நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களிலும் அதிமுக வெற்றிபெற்றது. இவ்வாறு அதிமுக தொடர்ந்து வெற்றிபெற்று கொண்டுதான் இருக்கிறது. இன்னும் ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்போதும் அதிமுகதான் முதலிடத்தில் உள்ளது; எப்போதும் அதிமுகதான் முதலிடத்தில் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அரசு மருத்துவமனை பின்புறம் அழுகிய நிலையில் ஆண் சிசு; போலீஸ் விசாரணை!

Last Updated : Jan 6, 2020, 2:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details