மக்களவை பொதுதேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல்18 ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள காவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பெயரில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்களிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
தபால் வாக்கு செலுத்திய காவலர்கள்...! - தபால் வாக்கு
திருவாரூர்: தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் தங்களின் வாக்கை தபால்வாக்கு மூலம் செலுத்தினர்.
அதன்படி திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 145 காவலர்களும், திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 366 காவலர்களும், நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 224 காவலர்களும், மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 231 காவலர்களும் ஆக மொத்தம் 966 காவலர்கள் நாடாளுமன்ற மற்றும் திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கான
தபால் வாக்குகள் அளித்தனர்.
இந்நிகழ்வில் அதிமுக,திமுக மற்றும் அமமுக கட்சியின் பிரதிகள் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை, அரசு அலுவலர்கள்,காவலர்கள் உடனிருந்தனர்.