கரோனா வைரஸ் கோரத் தாண்டவத்தால் உயிர் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. 144 தடை உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
பொதுவெளியில் சுற்றிய 11 தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மீது வழக்கு - திருவாரூரில் 144 தடை உத்தரவை மீறி பொதுவெளியில் சுற்றிய 11 தனிமைப்படுத்தப்பட்டவர்கள்
திருவாரூர்: 144 தடை உத்தரவை மீறி பொதுவெளியில் சுற்றிய 11 தனிமைப்படுத்தப்பட்டவர்கள், 407 பொதுமக்கள் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு. 378- வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 403-வழக்குகள் பதிசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை தகவல்.
![பொதுவெளியில் சுற்றிய 11 தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மீது வழக்கு police booked 11 quarentine persons those roaming outside](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6590786-32-6590786-1585534972572.jpg)
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஜந்தாவது நாளான நேற்று திருவாரூர் மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முகக் கவசம் அணியாதவர்கள் அனைவரும் கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறிய 407- நபர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 403 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 378 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் மருத்துவக் குழுவினரின் அறிவுரையை தவிர்த்து வீடுகளில் கண்காணிப்பில் உட்படுத்தப்பட்டிருந்த 11 தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 144 தடை உத்தரவை மீறி பொதுவெளியில் நடமாடியதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.