திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 9 நாள்களில் 144 தடை உத்தரவை மீறி மருத்துவக் குழுவினரின் அறிவுரையைத் தவிர்த்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 18 பேர் வெளியில் நடமாடுவதாக வந்த புகாரையடுத்து 18 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் காவல்துறையினர்.! - வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் காவல்துறையினர்
திருவாரூர்: 144 தடை உத்தரவை மீறி வெளியே சுற்றிய தனிமைப்படுத்தபட்ட 18 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த என்ன செய்வது என குழம்பி போய் நிற்கும் காவல்துறையினர்.
144 தடை உத்தரவை மீறியதாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 659 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆயிரத்து 678 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆயிரத்து 553 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினரின் அறிவுரையை கேட்காமலும் கரோனாவின் வீரியத்தை உணராமலும் வெளியில் சுற்றி வரும் வாகன ஓட்டிகளை என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி போய் இருக்கின்றனர் காவல்துறையினர்.
மேலும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு நாடுகள், மாநிலங்களிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய இரண்டாயிரத்து 364 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் குழுவினரின் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.