திருவாரூர் மாவட்டம், பெருகவாழ்ந்தான் அடுத்துள்ள கர்ணாவூர் கிராமத்தில் தற்போது சம்பா அறுவடை பணிகள் முடிவுற்ற நிலையில் விளைநிலங்கள் தரிசாக உள்ளது. இந்நிலையில் கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் கிராம மக்கள் கால்நடைகளை வயல் வெளிகளில் மேய்ப்பது வழக்கம்.
கர்ணாவூரைச் சேர்ந்த கீர்த்தி என்பவருக்குச் சொந்தமான விளை நிலத்தில் கோபால் என்பவர் தனது மூன்று மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்துவிட்டுள்ளார். இந்நிலையில், கீர்த்தி அறுவடை செய்த நெல்லை கால்நடைகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக வைக்கோலை கொண்டு மூடி வைத்து பூச்சி மருந்தைத் தெளித்ததாகக் கூறப்படுகிறது.