திருவாரூர் அருகே மாங்குடியில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றுவருகிறது. இதில், மாங்குடியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் இன்று பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்களை கதண்டு (விஷவண்டு) தாக்கியது.
இதில், மாங்குடியைச் சேர்ந்த விஜயலட்சுமி, ராஜம்மாள், வனிதா, கவிதா, ராணி, மஞ்சுளா, லட்சுமி ஆகிய பெண் தொழிலாளர்களை ஏழு பேரும் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். இதனையடுத்து, மயங்கி விழுந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.