தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வார்டு வரையறையில் குளறுபடி - மறுவரையறைக்குப் பின் தேர்தலை நடத்த மனு! - திருவாரூர் மாவட்டச் செய்திகள்

திருவாரூர்: இளவங்கார்குடி ஊராட்சியில் வார்டு வரையறை முறையாக பிரிக்கப்படாததால் மறுவரையறை செய்தபின் தங்கள் பகுதிக்கான தேர்தலை நடத்தக்கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

thiruvarur
thiruvarur

By

Published : Dec 12, 2019, 10:58 AM IST

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் இளவங்கார்குடி கிராமத்தின் வாக்காளர் பட்டியலில் சில வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாகவும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வெவ்வேறு வார்டுகளில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், "வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர்கள், தங்கள் பகுதிக்கான வார்டில் அல்லாமல் மற்றொரு பகுதி வார்டில் உள்ளதால் தங்களுக்கான வேட்பாளரை தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்படக்கூடும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மேலும், வார்டு உறுப்பினர் வெற்றியில் இதனால் குளறுபடி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வார்டு மறுவரையறைக்குப்பின் தேர்தலை நடத்த வேண்டும் எனக்கூறி, இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏலம்: செல்ஃபோனில் வீடியோ எடுத்ததால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details