திருவாரூர் மாவட்டம் மணவாளன் பேட்டை அருகே நான்கு கிலோமீட்டர் தொலைவில் மாப்பிள்ளை குப்பம் என்ற இடத்தில் இரண்டு டாஸ்மாக் மதுபான கடைகள் இருக்கின்றன. அதேபோல் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஆண்டிபந்தல் என்ற இடத்தில் ஒரு டாஸ்மாக் மதுபான கடையும், மற்றொரு பகுதியில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் சன்னாநல்லூர் என்ற இடத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை இருக்கின்றன.
இந்நிலையில் மணவாளன் பேட்டையில் மீண்டும் ஒரு டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்படவுள்ளது. இதற்கு அருகில் புதிதாகத் தனியாருக்குச் சொந்தமான நகர் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனால் நகர் பகுதியில் இடம் வாங்கிய உரிமையாளர்கள், பொதுமக்கள் நேற்று டாஸ்மாக் கடை திறக்கவிருந்த நிலையில், இங்கு திறக்கக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.