தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள்: நிவாரணம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்! - நிவாரணம் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருவாரூர்: கமலாபுரம் அருகே புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியவாசியப் பொருள்கள் வழங்காத அரசை கண்டித்து 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

By

Published : Dec 7, 2020, 8:35 PM IST

நிவர் புயல், புரெவி புயல் காரணமாக தொடர்ந்து பெய்துவந்த கனமழையினால் திருவாருர் மாவட்டம் வடபாதிமங்கலம், பாலகுறிச்சி, புள்ளமங்கலம், அரிச்சந்திரபுரம், மேலமணலி, கீழமணலி, பூந்தாழங்குடி உள்ளிட்ட 10க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் மழை நீர் புகுந்ததால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இவர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியவாசியப் பொருள்கள் வழங்காத அரசை கண்டித்து கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கமலாபுரத்தில் அருகேவுள்ள மாங்குடியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் மன்னார்குடி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூத்தாநல்லூர் வட்டாட்சியர் ஜீவானந்தம், இதுகுறித்து உடனடியாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்த பின் போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தில் திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தொடர் மழை எதிரொலி: 100 அடியை எட்டும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம்

ABOUT THE AUTHOR

...view details