தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’மக்கள் பிரார்த்தனைகளால் தான் உயிரோடிக்கிறேன்’ - அமைச்சர் காமராஜ் உருக்கம்! - people prayers recover my health

திருவாரூர்: நன்னிலம் தொகுதி மக்களின் பிரார்த்தனையே தான் உயிரோடு இருப்பதற்கு காரணமென உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உருக்கமாகப் பேசியுள்ளார்.

அமைச்சர் காமராஜ்
அமைச்சர் காமராஜ்

By

Published : Mar 13, 2021, 10:31 AM IST

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அதிமுக, அதன் கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட அதிமுகவின் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்த பின்னர் அவர் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது. இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி மக்களுக்கு எனது நன்றியை சமர்ப்பிக்கிறேன். உங்களுக்காக பணியாற்றி அதன் மூலம் உயிர் பிரிந்தாலும் வரவேற்பேன். 65 நாள்களுக்கு மேலாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நான் ஏழு நாள்கள் சுயநினைவின்றி இருந்தேன்.

செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் காமராஜ்

நான்கு மணி நேரமாக உயிரற்ற நிலையில் இருந்து இறுதியாக முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் மேற்கொண்ட முயற்சியியாலும், நன்னிலம் மக்களின் பிரார்த்தனைகள் மூலமாகவும்தான் மீண்டும் நான் உயிரோடு வந்துள்ளேன்" எனக் கண்ணீர் மல்கக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "95 விழுக்காடு நுரையீரல் செயல்படவில்லை என மருத்துவர்கள் கூறி வந்த நிலையில், நான் பிழைத்ததே அதிசயம் என்கிறார்கள். அத்தனைக்கும் காரணம் நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி மக்களின் கூட்டுப் பிரார்த்தனை தான்" என்றார்.

இதையும் படிங்க:தேர்தலுக்கு பிறகு அதிமுகவை மீட்டெடுப்போம்: டிடிவி தினகரன்

ABOUT THE AUTHOR

...view details