தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’இங்கே சாலையை விரிவாக்க வேண்டாம்’ -மாற்று வழி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

திருவாரூர்: சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தட சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செய்யப்படும் சாலை விரிவாக்கப் பணிக்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

மாற்று வழி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மாற்று வழி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

By

Published : Aug 3, 2020, 8:25 PM IST

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள முடிகொண்டான் என்ற கிராமத்தின் வழியாக செல்லும் பிரதான சாலையில், இருபுறமும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தட சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பாக திருவாரூர்-மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

ஆனால் நன்னிலம் முடிகொண்டான் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் வரை வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பில் வசிப்பவர்களைக் காலி செய்து கொடுக்கும்படி நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது : ”நாங்கள் ஆண்டாண்டு காலமாக இந்த இடத்தில் தான் வசித்துவருகின்றோம்.

மாற்று வழி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

இந்த சாலையில் ஏற்கனவே விபத்துகள் அதிகமாக அரங்கேறுகின்றன. மேலும் இந்த சாலை விரிவாக்கத்தால் இன்னும் அதிகமாக விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளன. இதுமட்டுமின்றி நாங்கள் பல லட்சங்கள் செலவு செய்து வீடு கட்டி வைத்துள்ளோம். சிலர் கடன் வாங்கி வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள்.

எங்களுக்கு இந்த இடத்திற்கான வீட்டுமனை பட்டாக்களும் உள்ளன. அதையும் மீறி, அரசு எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த இடத்தை காலி செய்து கொடுக்க மாட்டோம்” என்றனர். குறிப்பாக, எங்களின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு இச்சாலையை மாற்றுப்பாதையில் மாற்றியமைக்க, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஊழல் செய்யவே எட்டு வழி சாலை திட்டம்: திமுக எம்பிகள் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details