இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், கரோனா பரவலை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வழிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவின் யூனியன் பிரதேசம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் இதுவரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்.! - திருவாரூர் மாவட்டம் முழுவதும் காய்கறிகள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
திருவாரூர் : 144 தடை உத்தரவு இன்று மாலை அமலுக்கு வர இருப்பதால் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
அத்தியவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
அதன்படி, தமிழ்நாட்டில் இன்று (செவ்வாய்கிழமை) மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளதாக, தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதனால் திரூவாரூரில் உள்ள அனைத்து சந்தைகள் மற்றும் மளிகை கடைகளில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த காவல்துறையினர் நெரிசலை கட்டுப்படுத்தினர்.