தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சாலைய சீரமைங்க... இல்லனா ரேஷன் கார்ட நீங்களே வச்சிக்கோங்க' - nannilam demand road repair

திருவாரூர்: சாலையைச் சீரமைத்துத் தர வேண்டும் எனவும், இல்லை என்றால் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு அரசிடமே திருப்பி ஒப்பதைத்து போராட்டம் நடத்தப்படும் என்றும் நன்னிலம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

By

Published : Jul 13, 2020, 4:06 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள ஆலங்குளம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இப்பகுதி மக்கள் சாலை வசதி வேண்டி பல போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இதன் காரணமாக கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அவர்கள் அனைவரும் சேர்ந்து பணம் திரட்டி வயல்களின் வரப்புகளில் இரண்டு கிலோமீட்டர் தூரம் சாலை போட்டு பயன்படுத்திவந்தனர். பின்னர் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு அதே சாலையில் ஜல்லிக்கற்கள் போட்டு தார்ச் சாலையாக மாற்றயமைத்துக் கொடுத்தது.

தற்போது அந்தச் சாலையானது மோசமான நிலையில் உள்ளது. குழந்தைகளையும் முதியவர்களையும் அத்தியாவசியத் தேவைகளுக்கு வெளியே அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முக்கிய தேவை என்றாலும் ஆட்டோ மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கூட கிராமத்திற்கு வர தயங்குகின்றனர்.

சாலையைச் சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
தற்போது மீண்டும் சாலையைச் சீரமைக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதற்குப் பின்பும் சாலையைச் சீரமைத்துக் கொடுக்காவிட்டால், தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றைத் திருப்பி அரசிடமே கொடுத்து போராட்டம் நடத்தவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details