தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர்கள் கலந்துகொண்ட மருத்துவ முகாமில் காற்றில் பறந்த  தகுந்த இடைவெளி! - Covid-19

திருவாரூர்: குடவாசல் அருகே அமைச்சர்கள் கலந்துகொண்ட மருத்துவ முகாமில் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காற்றில் பறந்த தகுந்த இடைவெளி
காற்றில் பறந்த தகுந்த இடைவெளி

By

Published : Aug 9, 2020, 8:42 AM IST

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு மக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மாத்திரைகளை வழங்கினர்.

இந்நிகழ்வில், பொதுமக்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொருள்களை வாங்கி சென்றனர். இதனால் அங்கு கரோனா தொற்று அபாயம் ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details