தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் காத்திருந்த மயங்கி விழுந்த மூதாட்டி - ஆதிரங்கம்

பயோமெட்ரிக் முறையில், ரேஷன் பொருள்கள் வாங்க காலதமாதம் ஆவதால், இந்த முறையை கைவிட்டுவிட்டு பழைய முறையில் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

bio metric scheme failure
பயோமெட்ரிக் முறைக்கு மக்கள் எதிர்ப்பு; பழைய முறை தொடர கோரிக்கை

By

Published : Oct 13, 2020, 6:37 PM IST

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரங்கம் பகுதியில் செயல்பட்டுவரும் பகுதிநேர நியாயவிலைக் கடையில், பயோமெட்ரிக் முறையில் ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து பல்வேறு வகையான சிக்கல்கள் எழுந்துள்ளன.

முறையாக கைரேகையே பதிவு செய்யமுடியாததால் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்கவேண்டியதிருக்கிறது. அவ்வாறு இன்று நீண்ட நேரம் காத்துக்கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து அமரவைத்தனர். பயோமெட்ரிக் முறைக்கு பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வெயிலின் தாக்கத்தினால் மயங்கி விழுந்த மூதாட்டி

மேலும், தமிழ்நாடு முழுவதும் பயோமெட்ரிக் முறையில் பல சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், பழைய முறைப்படி அரிசி, உணவுப் பொருள்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:பயோமெட்ரிக் முறையால் அவதியுறும் மலைக்கிராம மக்கள்

ABOUT THE AUTHOR

...view details