தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் நிலங்களில் குடியிருப்பவர்கள் பட்டா கேட்டுப் போராட்டம்! - கோயில் நிலங்களில் குடியிருப்பவர்கள் பட்டா கேட்டு போராட்டம்

திருவாரூர்: பல தலைமுறைகளாக கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு அந்த இடங்களை சொந்தமாக்கி தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : Sep 17, 2019, 5:30 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் கோயில் நிலங்களில் குடியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போரட்டத்தில் பல தலைமுறைகளாக கோயில் நிலங்களை குடியிருப்புக்கும் தொழிலுக்கும் பயன்படுத்தி வரும் மக்களுக்கு அந்த இடத்தை சொந்தமாக்க நியாயமான விலையை தீர்மானித்து அரசு வழிவகை செய்ய வேண்டும்,

தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோஷங்கள் எழுப்பிய பொதுமக்கள்

இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்களில் சாகுபடி செய்வோருக்கு குத்தகை தொகையை உயர்த்துவதை ரத்து செய்ய வேண்டும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு அரசே அந்த இடங்களை கிரையம் செய்து தர வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதையும் படிங்க:

மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் ஒப்பாரிப் போராட்டம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details