திருவாரூர் அருகே அம்மையப்பன் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே அப்பகுதியில் சுற்றிவரும் குரங்கு ஒன்று, பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்களின் உணவை பறிக்க முயற்சிக்கிறது.
அரசுப் பள்ளியில் தொடரும் ‘குரங்கு’ சேட்டை - பெற்றோர்கள் அச்சம்! - monkey in government school
திருவாரூர்: அம்மையப்பன் ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளியில் குரங்கின் தொல்லை அதிகரித்துள்ளதால், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
![அரசுப் பள்ளியில் தொடரும் ‘குரங்கு’ சேட்டை - பெற்றோர்கள் அச்சம்! monkey in government school, அரசுப் பள்ளியில் குரங்கு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5294440-thumbnail-3x2-monkey.jpg)
அதுமட்டுமல்லாது வகுப்பறையில் புகுந்து மாணவர்களைத் துரத்துவது போன்ற சேட்டைகளில் ஈடுபடுகிறது. விரட்ட முயற்சி செய்த உடற்கல்வி ஆசிரியரையும் அந்தக் குரங்கு கடித்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் வனத்துறை உதவியுடன் குரங்கை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சமீபத்தில் பெய்த தொடர்மழை காரணமாக தங்கள் பிள்ளைகளின் படிப்புகள் ஒருபுறம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது இந்த குரங்கின் அட்டகாசத்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சம் ஏற்படுகிறது எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.