திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ஏத்துக்குடி கிராமத்தில் நேற்று (ஆக. 9) ஊர் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏத்தக்குடி பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரியின் கணவர் பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பன்னீர்செல்வத்திற்கும், கூட்டத்தில் இருந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியதில் ஏத்தக்குடி பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரியின் கணவர் பன்னீர்செல்வம் தாக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.