திருவாருர் மாவட்டம் நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் குறுவைச் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது அறுவடைப் பணிகள் தொடங்கவுள்ளன.
மழையால் வயலில் சாய்ந்த நெற்பயிர் - விவசாயிகள் வேதனை - திருவாருர் நீரில் மூழ்கிய நெற்பயிர்
திருவாருர்: அறுவடைப் பணிகள் தயாராக இருக்கும் நேரத்தில் பெய்த மழையால் நெற்பயிர் வயலில் சாய்ந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
![மழையால் வயலில் சாய்ந்த நெற்பயிர் - விவசாயிகள் வேதனை paddy Spoiled in heavy rain](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-tn-tvr-01-rain-paddy-damage-farmers-sad-vis-script-tn10029-15072020120151-1507f-00669-453.jpg)
paddy Spoiled in heavy rain
இந்நிலையில், நேற்று வெப்பச்சலனம் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் முழுவதும் வயலிலேயே சாய்ந்தன. அறுவடையின்போது ஈரப்பதம் கூடுதலாக இருந்தால் நெற்பயிர்களின் விலை குறைந்துவிடும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.