திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வேலங்குடி ஊராட்சிக்குள்பட்ட கமுகக்குடிப் பகுதியில் சம்பா சாகுபடி சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெல் அறுவடை இயந்திரம், அறுவடை பணிக்காக வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் தீப்பொறிகள் ஏற்பட்டன.
இதன்பின்பு மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறிகளுடன் அறுவடை இயந்திரத்தின் மேல் முழுவதுமாக சாய்ந்தன. இதனால் அந்தப் பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நிலவியது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அறுவடை இயந்திரத்தை சிறைபிடித்தனர்.