திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தனியார் திருமண மண்டபத்தில் 13ஆம் ஆண்டு தேசிய அளவிலான நெல் திருவிழா நேற்று (ஜூன் 9) தொடங்கியது. இந்தத் திருவிழாவில் ஒடிசா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.
13ஆவது தேசிய நெல் திருவிழா! - Trivarur
திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் 13ஆவது தேசிய நெல் திருவிழா இரண்டாவது நாளாக இன்று தொடங்கியது. இதில் பாரம்பரிய உணவுகளான கூழ், நவதானிய அடை, துாதுவளை ரொட்டி போன்ற உணவுகள் இடம்பெற்றிருந்தன.
விழாவில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுப்பது, குறைந்த அளவு நீரினால் நெல் சாகுபடி செய்வது, சந்தைவாய்ப்பு ஏற்படுத்துவது குறித்த தகவல்கள், பாரம்பாரிய நெல் சாகுபடியால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இரண்டாவது நாளான இன்று நிகழ்ச்சியில் பாரம்பாரிய உணவு திருவிழா நடைபெற்றது. இதில் பாரம்பரிய உணவுகளான கம்பு, கேழ்வரகு நவதானியக் கூழ், கம்பு, கேழ்வரகு, திணை போன்ற அரிசிகளால் செய்யப்பட்ட கொழுக்கட்டைகள், நவதானிய வடைகள், அடைகள், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளினால் செய்யப்பட்ட சாம்பார், பாரம்பாரிய அரிசிகளால் வடிக்கப்பட்ட சோறு, தூதுவளை ரொட்டி, தூதுவளை ஜூஸ் போன்ற பாரம்பாரிய உணவு பொருள்களால் உணவுத்திருவிழா நடைபெற்றது.