திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் கிராமத்தைச் சேர்ந்த மறைந்த நெல் ஜெயராமன் அழிவின் விளிம்பிலிருந்த நம் பாரம்பரிய நெல் ரகங்களில் 174 ரகங்களை மீட்டெடுத்து ஆண்டுதோறும் பாரம்பரிய நெல் திருவிழா மூலம் அனைத்து மாநில விவசாயிகளிடத்திலும் கொண்டுசேர்த்தவர்.
விவசாயிகளிடம் மட்டும் இல்லாமல் மாணவர்களிடமும் பாரம்பரிய நெல் விதைகளின் முக்கியத்துவத்தை கொண்டுசேர்க்கும் வகையில் அவருடைய விதைப்பண்ணையில் ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளுக்கு நாற்று நடுவது, களை பறிப்பது, பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது வழக்கமாக இருந்துவந்தது.
அவருடைய மறைவை அடுத்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அவருடைய குடும்பத்தார்கள் முன்னின்று நடத்தினார்கள் இதில் மாணவ, மாணவிகளுக்கு நாற்று நடுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.