டெல்டா மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் விவசாயத்தை சார்ந்து இருக்கின்றனர். விவசாயத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அடுத்த பெரும்பண்ணையூர் கிராமத்தில் அன்பழகன் என்பவருக்குச் சொந்தமான வயலில் பாரம்பரிய நெல் நடவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாரம்பரிய நெல் மீட்பாளர் பசுமை எட்வின் தலைமை தாங்கினார்.
இந்த நடவுப் பணியில் கிரீன் நீடா அமைப்பினர், பொது மக்கள், விவசாயிகள் கலந்துகொண்டு பாரம்பரிய நெல் ரகமான கிச்சிலி சம்பா, இலுப்பைப்பூ சம்பா போன்ற நெல் பயிர்களை நான்கு ஏக்கர் அளவில் நடவு செய்தனர்.