திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில் அரசு மதுபானக் கடை திறப்பதற்காக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுவருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டூர், கருப்புகிளார், கோமலாப்பேட்டை, கோட்டூர் தோட்டம், மேளாபனையூர் உள்ளிட்ட ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோட்டூர் ஊரட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற சாலை மறியலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பள்ளிக்கூடம் அருகேஅரசு மதுபானக் கடை திறக்கக் கூடாது என்றும், டாஸ்மாக் கடைக்காக புதிய கட்டிடம் கட்டக்கூடாது எனவும் வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.