தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 29, 2020, 9:07 AM IST

ETV Bharat / state

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு: ஊராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்

திருவாரூர்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவர் கூட்டம்
ஊராட்சி மன்ற தலைவர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சி கூட்டரங்கில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கான மாதாந்திர கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், விவசாயத் தொழிலாளர்களின் பொருளாதாரத்தினை அழித்துவிடும் நோக்கில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் விளைபொருள்கள் மசோதா

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா

அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களையும் உடனே ரத்து செய்திட வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதியில் மீண்டும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற எண்ணெய் கிணறுகள் புதுப்பிக்கும் பணிகளை தடுத்து நிறுத்திட வேண்டும்.

தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு வழங்கிய நிர்வாக அனுமதி ரத்து செய்து மாவட்ட முழுமைக்குமான வளர்ச்சியின் அடிப்படையில் திருந்திய நிர்வாகத்தின் அனுமதி வழங்கிட வேண்டும்.

திருத்துறைப்பூண்டி வட்டாரம் எழிலூர் வங்கநகர் ஏரியினை முழுமையாக தூர்வாரி நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு பயன்பெறுமாறு வழிசெய்யப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக எந்தவித எதிர்ப்புமின்றி நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர், செயலாளர் லதா, திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details