நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் 45 நாள்கள் கடந்துவிட்டன. கடந்த சில நாள்களுக்கு முன்னர் மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு தொழில்கள் வணிக நிறுவனங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், மதுபானக் கடைகளும் நேற்று முதல் திறக்கப்பட்டன.
திருவாரூரில் 101 மதுபானக் கடைகள் திறப்பு - Opening of 101 Liquor Stores in Thiruvarur
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 101 டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.

அதன்படி திருவாரூர் மாவட்டம் முழுவதும் 101 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன. ஆனால் கிராமப்புறங்களில் உள்ள மதுபானக் கடைகளில் கூட்டம் குறைந்து காணப்பட்டது. குறிப்பாக நன்னிலம், ஆண்டிபந்தல், சன்னநல்லூர், மாப்பிள்ளை குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளில் சொற்ப அளவிலேயே குடிமகன்கள் மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.
மேலும் ஒலிபெருக்கி மூலம் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தியதோடு, தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் பாதைகள் அமைக்கப்பட்டும் மதுபானங்கள் விற்கப்படுகின்றன.
இதையும் படிங்க:சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை நிவாரண நிதியாக அளித்த சிறுவர்கள்!