இது குறித்து அவர் கூறுகையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடகம், கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, அம்மாநில அணைகளில் இருந்து உபரி நீர் மட்டும் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் வெளியேற்றபடுகிறது. இதனால் ஓரிரு வாரங்களில் மேட்டூர் அணை நிரம்ப கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மேற்குதொடர்ச்சி மலைபகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பவானி அணை நிரம்பி விட்டது.
முழுகொள்ளவை எட்டியுள்ள பவானி அணையில் இருந்து 60 ஆயிரம் கன அடி தண்ணீரை அமராவதி ஆற்றின் வழியாக காவிரி ஆற்றில் உடனடியாக வெளியேற்ற கூடிய நிலை ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்க கூடிய விஷயமாகும்.
செய்தியாளர்களை சந்திக்கும் பி.ஆர்.பாண்டியன் பொதுப்பணித்துறை சார்பில் ஏரிகள் தூர்வாரும் பணிக்கும், குடிமராமத்து பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை குடிமராமத்து பணிகள் 50 சதவீதம் மட்டும் நிறைவடைந்த நிலையில், மற்ற பணிகள் யாவும் இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே அவற்றை நிறுத்திவிட்டு பவானியில் கிடைக்கின்ற தண்ணீரை அமராவதி, கல்லணை மூலமாக பாசனத்திற்கு தடையின்றி கொண்டு செல்ல பொதுப்பணித்துறை, வருவாய்துறை, காவல்துறை, விவசாயிகள் கொண்ட கண்காணிப்புகுழு அமைத்து வறண்டு கிடக்கின்ற நீர்நிலைகளை நிரப்பவேண்டும்.
மேலும் இந்த ஆண்டு சாகுபடிகளை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு வேளாண் சார்ந்த இடுபொருட்களை தரமானதாக வழங்குவதற்கு முன்வரவேண்டும். இந்தாண்டு சாகுபடி செய்வதற்கு தண்ணீர் திறப்பது குறித்து தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவேண்டும் என்றார்.