திருவாரூர் மாவட்டம்முழுவதும் இந்தாண்டு 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து, அதனை அறுவடை செய்து வருகின்றனர். அவ்வாறு அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வது வழக்கம்.
ஆனால், தற்போது தமிழ்நாடு அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வரும் விவசாயிகள், முன்கூட்டியே ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். பின்னர் அதில் குறிப்பிட்ட தேதியன்று விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை கொண்டு செல்லலாம் என அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு ஆன்லைனில், விவசாயிகள் தங்களுடைய நெல்லை விற்பனை செய்ய 10, 15 நாள்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் உள்ள சிறு குறு விவசாயிகள் அனைவரும் தனியார் நெல் வியாபாரிகளிடம் விற்பனை செய்தால் உடனடியாக பணம் கிடைக்கும் என்பதால் தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால், மூட்டைக்கு 200 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். எனவே தமிழ்நாடு அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு ஆன்லைன் விற்பனை முறையை தற்காலிமாக நிறுத்தி வைத்து பழைய முறையை நடைமுறைபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:பில்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டு - 700 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு