தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 11, 2020, 8:08 AM IST

ETV Bharat / state

அனுமதியில்லாமல் எண்ணெய் கிணறு அமைக்கும் ஓஎன்ஜிசி: நிலத்தை மீட்டுத்தர விவசாயி கோரிக்கை

திருவாரூர்: முறையான அனுமதி பெறாமல் எண்ணெய் கிணறுகளை அமைத்து வரும் ஓஎன்ஜிசி நிறுவனத்திடமிருந்து தனது நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என அலிவலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அலிவலம் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு  திருவாரூர் செய்திகள்  ongc made oil well without permission in thiruvarur  ongc oil well issue
அனுமதியில்லாமல் எண்ணெய் கிணறு அமைக்கும் ஓஎன்ஜிசி

திருவாரூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் 100க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகிறது. டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதலமைச்சர் நேற்று அறிவித்துள்ள நிலையில், நேற்று திருவாரூரில் புதிய எண்ணெய் கிணறு அமைக்கும் பணியினை ஓஎன்ஜிசி நிறுவனம் தொடங்கியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் அலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவருக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தை ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் குத்தகைக்குக் கொடுத்துள்ளார். அந்த நிலத்தில் 20 வருடங்களுக்கு முன்பு இரண்டு இடங்களில் எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெயை எடுத்துவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயி

இந்நிலையில், நிலத்தின் உரிமையாளர் அனுமதியில்லாமல் மூன்றாவது எண்ணெய் கிணறு அமைக்கும் பணியினை தற்போது ஓஎன்ஜிசி நிறுவனம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து நிலத்தின் உரிமையாளர் தெரிவிக்கையில், ஓஎன்ஜிசி நிறுவனத்திம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படாமல் அத்துமீறி செயல்பட்டுவருவதாகவும் தனது நிலத்தை ஓஎன்ஜிசி நிறுவனத்திடமிருந்து மீட்டுத்தர வேண்டும் எனவும் கூறினார்.

இதையும் படிங்க: தண்ணீர் பெறுவதில் பாகுபாடு கூடாது - ஏ.ஆர். ரகுமான்

ABOUT THE AUTHOR

...view details