திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த மருதவனம் பகுதியைச் சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடந்த 15ஆம் தேதி இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரைப் பரிசோதனை செய்ததில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று (ஜூலை 19) உயிரிழந்தார். இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 4 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாரூரில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு! - Thiruvarur District News
திருவாரூரில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 39 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கரோனாவுக்கு ஆண் உயிரிழப்பு
இதையும் படிங்க:கரோனா பாதிப்பு: சென்னையில் 19 பேர் உயிரிழப்பு!