திருவாரூர் மாவட்டம், வைப்பூர் அருகே உள்ள திருவாதிரை மங்கலத்தைச் சேர்ந்தவர் பாரதி மோகன் (27) இவரது மனைவி வேம்பு (23). இவர்கள் இருவரும் வாய் பேச இயலாதவர்கள். கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். இந்தத் தம்பதிக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், பாவேந்தன் எனும் ஒன்றரை வயது ஆண் குழந்தை இவர்களுக்கு உள்ளது.
இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக தம்பதிகள் இருவருக்கும் இடையே தொடர்ந்து குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் வேம்பு கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்குச் சென்ற நிலையில், உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தி இருவரையும் ஒன்று சேர்த்து வைத்துள்ளனர்.