திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் தரையில் கிடந்துள்ளார். இதனைக் கண்ட சிலர் அவரை எழுப்பிப் பார்த்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அளித்த தகவலின்பேரில், திருவாரூர் தாலுகா காவல் துறையினர் அவரது சடலத்தைக் மீட்டு பிணவறைக்குக் கொண்டுசென்றனர்.
திருவாரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் 50 வயது முதியவர் உயிரிழப்பு! - திருவாரூர் மருத்துவமனை வளாகத்தில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு
திருவாரூர்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![திருவாரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் 50 வயது முதியவர் உயிரிழப்பு! Old man died in hospital](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7886910-thumbnail-3x2-f.jpg)
Old man died in hospital
மேலும் அவர் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு வந்தாரா அல்லது சிகிச்சைப் பெற்று வந்தவரா என்பது குறித்தும், அவரது முகவரி, அவரின் உறவினர்கள் யார் என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.