வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் இன்று (பிப்.23) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பகுதி நேர சத்துணவு ஊழியர்களாக பணியாற்றி வருபவர்களை முழு நேர ஊழியராக்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். ஓய்வு பெறும் ஊழியருக்கு ரூபாய் 5 லட்சம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த மறியல் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர். இவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம்: 300க்கும் மேற்பட்ட பெண்கள் கைது ! - வேலூர் மாவட்ட செய்திகள்
வேலூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதே போல் திருவாரூர் மாவட்டத்திலும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் லதா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கருப்புச்சட்டை அணிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்