தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மது பாட்டில்கள் கடத்திவந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவலர்கள் பணியிடை நீக்கம் - No action against youths

திருத்துறைப்பூண்டி அருகே கடந்த 4ஆம் தேதி மதுபாட்டில்களைக் கடத்திவந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்து தஞ்சாவூர் சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

6 காவல்துறையினர் பணியிடை நீக்கம்
6 காவல்துறையினர் பணியிடை நீக்கம்

By

Published : Jul 23, 2021, 2:41 PM IST

திருவாரூர்:புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்கள் கடத்திவரப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தடுக்கும்விதமாக காவலர்கள் பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணித்துவந்தனர்.

இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி புதுச்சேரியிலிருந்து இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தின் மூலம் மது பாட்டில்களைக் கடத்திவந்துள்ளனர். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலத்தம்பாடியில் மதுவிலக்கு காவல் துறையினர் சோதனை செய்ததில் சிக்கிக் கொண்டனர்.

இதனையடுத்து இருவரையும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு ஏதும் செய்யாமல் விடுவித்துள்ளனர்.

இது குறித்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனுக்குப் புகார் சென்றதைத் தொடர்ந்து விசாரித்ததில் மது பாட்டில்களைக் கடத்தியவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காதது உண்மை எனத் தெரியவந்தது.

தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், தஞ்சாவூர் சரக டிஐஜி பர்வேஷ் குமாருக்கு இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெரியப்படுத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைசெய்தார்.

இதனடிப்படையில் திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ஞானசுமதி, உதவி ஆய்வாளர் வரலட்சுமி, தலைமைக் காவலர்கள் சண்முகநாதன், ராஜா முதல்நிலைக் காவலர் பாரதிராஜன், விமலா ஆகியோரைப் பணியிடை நீக்கம்செய்யப்பட்டனர்.

மது பாட்டில்களைக் கடத்திவந்தவர்கள் கோட்டூர் பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ், கேசவன் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:கண்ணை கூசும் விளக்குகளை பயன்படுத்தி திருட்டு!

ABOUT THE AUTHOR

...view details