திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் புகார்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட நிவர் புயல் கணிப்பாய்வு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ஷில்பா பிரபாகர் சதீஷ், மாவட்ட ஆட்சியர் சாந்தா ஆகியோர் நேரில்சென்று ஆய்வுமேற்கொண்டு கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் குறித்த விவரங்களை அங்குப் பணிபுரியும் அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் கூறியதாவது:
தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல திருவாரூர் ஆட்சியர் வேண்டுகோள்! - Nivar Cyclone Protection
திருவாரூர்: தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் காலதாமதம் செய்யாமல் தங்களது உடைமைகளுடன் உடனடியாக நிவாரண மையங்களுக்குச் செல்லுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா வேண்டுகோள்விடுத்துள்ளார்.
கடந்த இரு தினங்களாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு ஒலிபெருக்கி வாயிலாகப் புயல் எச்சரிக்கைகள்விடப்பட்டு மக்கள் தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள நிவாரண மையத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை வருவதற்கு முன்பாக மக்கள் நிவாரணம் மையத்திற்குச் சென்றுவிடுமாறு வேண்டுகோள்விடப்பட்டுள்ளது.
10 பேர் கொண்ட ஐந்து பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. 30 மருத்துவக் குழுக்கள் மாவட்டம் முழுவதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நிவாரண மையங்களில் உணவுப் பொருள்கள், பால் பவுடர் போன்றவை ஏழு நாள்களுக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது. மக்கள் தொடர்புகொள்வதற்காக 1077 கட்டணமில்லா தொலைபேசி எண், 225050-225060 -225080 என்பது போன்ற தொலைபேசி எண்கள் வாயிலாகவும் மக்கள் தொடர்புகொண்டால் உடனடியாகத் துறைசார்ந்த அலுவலர்கள் மூலம் பிரச்சினைகள் சரிசெய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.