திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளி வேன், கோட்டூர், விக்கிரபாண்டியம், திருக்கொள்ளிக்காடு பகுதிகளில் மாணவ, மாணவிகளை ஏற்றி வருவது வழக்கம்.
அந்த வகையில், இன்று காலை 9 மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த பள்ளி வேன், மஞ்சவாடி என்ற இடத்தில் வேனின் பின்பக்க டயர் திடீரென வெடித்ததில் நிலை தடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது.
பள்ளி வேன் கவிழ்ந்த விபத்து இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காயமடைந்த ஒட்டுநர், மாணவிகள் ஒன்பது பேரையும் மீட்டு ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஐயப்ப பக்தர்களின் வாகனம் விபத்து: 8 வயது சிறுமி உயிரிழப்பு!