ராமநாதபுரம் மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டு கீழக்கரையில் ஒரு இந்து முன்னணி பிரமுகர் கொலை சம்பவத்தில் குற்றவாளியாக கீழக்கரை தேவிப்பட்டினம், பரங்கிப்பேட்டை, திருவல்லிக்கேணி ஆகிய பகுதியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், முத்துப்பேட்டை தென்னை மரைக்காயர் தெருவை சேர்ந்த சாஜித், நண்டு மரைக்காயர் தெருவை சேர்ந்த இம்தியாஸ், நெய்யக்கார தெருவை சேர்ந்த ரிஸ்வான் ஆகிய மூன்று பேர் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.
முத்துப்பேட்டையில் சோதனை நடத்திய தேசிய புலனாய்வு முகமை! - raid
திருவாரூர்: முத்துப்பேட்டையில் மூன்று வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை போலீசார் நடத்திய சோதனையில் கத்தி, செல்போனை ஆகியவற்றை கைப்பற்றி சென்றனர்.
மேலும், இவர்கள் சதித்திட்டம் தீட்ட முத்துப்பேட்டையில் ரகசிய கூட்டம் நடத்தியதாகவும், இதில் சிறையில் இருக்கும் தீவிரவாத அமைப்புகளை சேர்த்தவர்களை வெளியே கொண்டு வரவும், இரு சமூகத்தினரிடையே மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வண்ணம் சதித்திட்டம் தீட்டியதாகவும் கீழக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, 2018ஆம் ஆண்டு மூன்று பேரையும் கைது செய்து சென்றனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை முத்துப்பேட்டைக்கு வந்த தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த உயர் அதிகாரிகள் 10 பேர் தலைமையில் 80க்கும் மேற்பட்டோர் இந்த மூன்று பேரின் வீடுகளை சோதனையிட்டத்தில் கத்தி, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.