தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நன்னிலத்தில் நவராத்திரி: கொலுவைத்து கோலாகல கொண்டாட்டம்

நன்னிலம் அருகே 3000-க்கும் மேற்பட்ட கொலுவைத்து நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

கொலு வைத்து கோலாகல வழிபாடு
கொலு வைத்து கோலாகல வழிபாடு

By

Published : Oct 15, 2021, 6:52 AM IST

திருவாரூர்: இந்துக்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. மகிஷாசுரனுடன் அம்பாள் ஒன்பது நாள்கள் போரிட்டு பத்தாவது நாளான தசமியன்று வெற்றிபெற்றார். இந்த ஐதீகத்தின் அடிப்படையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டுவருகிறது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் வேம்படி மாரியம்மன் கோயில் ஆலயத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கொலு பொம்மைகள் வைத்து கொண்டாடப்பட்டுவருகிறது.

கொலுவைத்து கோலாகல வழிபாடு

இந்த ஆண்டு நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாள்களும் கலை உணர்வு பக்தியை வெளிப்படுத்தும்விதமாக பலவிதமான தெய்வங்களின் உருவங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.

இதில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு ஆண்டும் அனைத்துத் மதத்தினரும் இதனை ஆர்வத்துடன் கண்டுகளித்து-வருகின்றனர்.

இதனை அனைத்து மதத்தினரும் வழிபடலாம், காரணம் அனைத்துக் கடவுளரும் இந்தக் கொலுவில் இருப்பர். கொலுவை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இதையும் படிங்க:சிலை கடத்தல்காரர்களின் சிம்ம சொப்பனனாக உள்ள சிங்கை வாழ் தமிழன் விஜய் குமார்!

ABOUT THE AUTHOR

...view details